கோவை: போதை இல்லா எதிர்காலத்தை நோக்கி மாரத்தான் ஓட்டம்

கோவை, தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் போதை இல்லா எதிர்காலத்தை நோக்கி என்ற தலைப்பில் மாபெரும் மாரத்தான் ஓட்டம் நேற்று தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.;

Update: 2025-04-21 04:49 GMT
கோவை, தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் போதை இல்லா எதிர்காலத்தை நோக்கி என்ற தலைப்பில் மாபெரும் மாரத்தான் ஓட்டம் நேற்று தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் ஈஷா யோகா மைய தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போதையின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக இளைஞர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில், பெரியவர்கள் 10 கிலோ மீட்டர் தூரமும், சிறியவர்கள் 5 கிலோ மீட்டர் தூரமும் ஓடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.2,500 வழங்கப்பட்டது. மேலும், பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர், தலைவர் ஏ.பி. சரவணன், செயலாளர் டி. கார்த்திகேயன், மாரத்தான் திட்டத் தலைவர் ஜி. ராஜசேகர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News