கள்ளக்காதலை  கண்டித்ததால் தகராறு - பரபரப்பு

மார்த்தாண்டம்;

Update: 2025-04-21 07:39 GMT
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய 29 மனைவிக்கும் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த திருமணமான 30 வயது வாலிபருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த ஜோடி கடந்த தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டத்தில் உல்லாசத்தில் இருந்துள்ளனர். இதை பார்த்து அப்பகுதி வாலிபர்கள் அவர்களை கண்டித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.       மீண்டும் நேற்று முன் தினம் அதேபோன்று அதே கட்டிடத்தில் அரைகுறை ஆடையுடன் உல்லாசத்தில் இருந்தபோது பிடிபட்டு வாலிபர்கள் கள்ள காதல் ஜோடி இடம் தகராறு செய்து அவர்களை செல்போனில் வீடியோ எடுத்து எச்சரித்து அனுப்பினதாக கூறப்படுகிறது.      இதற்கிடையில் தங்களை கையும் களவுமாக பிடித்த ஆத்திரத்தில் இருந்த கள்ளக்காதலன் ஒரு கும்பலுடன் சேர்ந்து வாலிபர்கள் வசிக்கும் காலனிக்கு சென்று தகராறில்  ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தக் காலனியில் இருந்த குடிநீர் தொட்டியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்கள். இதை தொடர்ந்து இச்சம்பம் குறித்து  மக்கள் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தனர்.       இதேபோல் கள்ளக்காதல் ஜோடியும் தாங்கள் அந்த வழியாக சென்றபோது தடுத்து நிறுத்தி தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இரு தரப்பு புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News