பழையபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் ஆய்வு
நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஏப்ரல் 21) 17வது வார்டுக்கு உட்பட்ட பழையபேட்டை பகுதியில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்பொழுது மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.