தேனி வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் முற்றுகை 

தாரகை கத்பட் எம்எல் ஏ;

Update: 2025-04-21 07:44 GMT
மார்த்தாண்டத்தில் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் வெட்டுமணி பகுதியில் உள்ளது. இந்த சங்கத்தில் தேன் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆண்டு  இந்த கூட்டுறவு சங்கத்தில் நேற்று வரை தேன் கொள்முதல் செய்யவில்லை. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.      இந்த நிலையில் நேற்று மாலை தாரகை கத்பட் எம்எல்ஏ தலைமையில் தேனீ வளர்ப்போர் சங்க அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்க தலைவர் வெனிஸ் மற்றும் நிர்வாகிகள் அங்கு வருகை தந்து சங்க சிறப்பு அதிகாரி சத்யராஜ் உள்ளிட்டவர்கள் தாரகை கத்பட் எம்எல்ஏ உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.       இதில் உடன்பாடு ஏற்பட்டது தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தை முடிவில் நாளை முதல் தேனி உற்பத்தியாளர்கள் பட்டியல் ஒட்டப்பட்டு டோக்கன் வழங்கி, 22-ம் தேதி (நாளை) முதல் தினமும் தேன் கொள்முதல் செய்யப்படும் என்றும், இந்த ஆண்டு 3 லட்சம் கிலோ தேன் கொள்முதல் செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News