சங்கரன்கோவில் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குப்பட்டி கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 1 மாதங்களாக வாருகால் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதி தெருக்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் 1 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், அந்தப் பகுதிகளில் வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் முற்றுகை இட்டனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.