தபால் நிலையத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் வைக்க கோரிக்கை.
குமாரபாளையம் தலைமை தபால் நிலையத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் அமைக்க MNM கோரிக்கை.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மட்டுமே ஆதார் சேவை மையம் செயல்படுகிறது இதன் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் ஆதார் அட்டைகளில் உள்ள பிழைகளை சரி செய்வது குழப்பம் ஏற்பட்டு வருகிறது அதனால் தடுமாறுவதால் அருகில் உள்ள ஈரோடு மாவட்டம் பவானி தலைமை தபால் நிலையத்திற்கு செல்லுமாறு குமாரபாளையம் தபால் நிலைய ஊழியர்கள் தெரிவிப்பதால் பொதுமக்கள் அங்கு சென்று தங்கள் ஆதார் சேவைகளை பெற நினைத்தால் அந்த பணி புரியும் ஊழியர்கள் தங்களுக்கு தங்கள் பகுதி பணிகளை சரியாக இருக்கும் பொழுது வார பாளையம் பகுதி பொது மக்களும் இங்கு வருவதால் தன்னால் பணி செய்ய முடியவில்லை என பொதுமக்களிடம் திட்டுவதால் பெரும் பாதிப்புக்குள் ஆகியுள்ளனர் இதன் காரணமாக குமாரபாளையம் தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையத்தை தினந்தோறும் செயல்படுத்த வேண்டி மற்றும் பெயர் திருத்தம், பிறந்த தேதி மாற்றம் செய்தல் அனைத்தும் செயல்படுத்த வேண்டும் என்று நாமக்கல் தலைமை கோட்ட கண்காணிப்பாளர் திருமதி. இந்திராவிடம் நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் .சித்ராபாபு நகர அமைப்பாளர் உஷா, ஒன்றிய அமைப்பாளர் மல்லிகா, மாவட்ட துணைச் செயலாளர் .மகுடேஸ்வரன், பள்ளிபாளையம் நிர்வாகி .ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.