தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வெடிக்கும் பெரும் சத்தம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வெடிக்கும் பெரும் சத்தம் நில அதிர்வு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் ஜோசப் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல் மாவட்டம் முழுக்க கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பெரும் அதிருடன் கூடிய வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு இதுவரை எட்டு முறை வெடி சத்தம் கூடிய அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களிடத்தில் தரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே பலமுறை மனு கொடுத்தோம் இதுவரை சரியான விளக்கம் அளிக்கவில்லை. ஏழு ஆண்டுகளாக தொடரும் பீதிக்கு மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் புதிய அறிவியல் ஆய்வுடன் கூடிய விளக்கத்தை மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.