அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப்படை காவலர் பலி பரபரப்பு

தாராபுரம் அருகே  கோவை ஆயுதப்படை போலீஸ் அமராவதி ஆற்றில் மூழ்கி பலி உடலை மீட்டு போலீசார் விசாரணை.;

Update: 2025-04-21 13:04 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள சங்கரண்டாம்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மராஜ் என்பவரது மகன் ராஜா45, கோவை மாநகர ஆயுதப்படை போலீசாக இருந்து வருகிறார், இவர் தனது சொந்த கிராமமான காளி பாளையத்தை விட்டு கோவைக்கு குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என தெரியவந்துள்ளது,    ராஜாவின் நண்பர் சரவணன் 43 ,இவரும் கோவை மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியில் உள்ளார் .நண்பர்கள் இருவரும் ராஜாவின் சொந்த ஊரான காளி பாளையத்திற்கு சென்று வரலாம் என இருசக்கர வாகனத்தில் வந்த போது அமராவதி ஆற்றில் தண்ணீர் ஓடுவதை கண்டதும் இருவரும் ஆற்றில் குளிக்க ஆர்வமுடன் இறங்கினர்,    ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது சரவணன் அமராவதி ஆற்றுக்குள் சேரும் சகதியும் நிறைந்த அபாயகரமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார், அவரை காப்பாற்ற ராஜா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முயற்சி செய்தபோது சரவணன் முழுவதுமாக நீரில் மூழ்கினார் பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சரவணனை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர், இதன்பின் சரவணனின் உடல் தாராபுரம் அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது, சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கோவையைச் சேர்ந்த ஆயுதப்படை போலீசார் தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Similar News