கேபிள் ஒயர் திருடிய மூன்று சகோதரர்கள் கைது
தாராபுரம் அடுத்த மணக்கடவு கிராமத்தில் கேபிள் ஒயர் திருடிய வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3- சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.;
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மணக்கடவு பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி என்பவரது மகன் செல்வராஜ் இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தங்கை வினிதாவுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் கடந்த 15 -ந் தேதி காலை தொட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக செல்வராஜ் சென்ற போது கிணற்றின் அருகே இருந்த கேபிள் ஒயர் 100 மீட்டர் அளவிற்கு வெட்டி எடுக்கப்பட்டு திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வராஜ் அவங்கியம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெரில் போலீசார் வழகருப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர். அப்போது மனக்கடவு பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சந்தேகத்திற்கு இடமான நபர்கள் கேபிளுடன் சென்றால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் மூன்று பேர்கள் கேபிள் ஒயரை சுற்றிக்கொண்டு ஓடியதை கண்ட பொதுமக்கள் 3 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அலங்கியம் போலீசார் ஒயர்திருடிய 3 பேரையும் மீட்டெடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் வினிதாவுக்கு சொந்தமான தோட்டத்தில் ரூ.6 ஆயிரத்து 500 மதிப்புள்ள 100 மீட்டர் ஒயரை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர்கள் மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்பதும் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பாரது மகள் சக்திவேல்(30), சிராக(26), ராசு(24) என்பதும் தெரியவந்தது. அவர்களை அலங்கியம் போலீசார் கைது செய்துள்ளனர் இவர்களிடமிருந்து கேபிள் ஒயர் மீட்கப்பட்டது.