குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழந்தது.;

Update: 2025-04-21 17:01 GMT
ஒட்டன்சத்திரம் அருகே குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழந்தது. சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுனில் ஏக்கா. இவா் குடுபத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பாறைவலசு கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி கூலி வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகள் பிரின்சி (3). இந்தக் குழந்தை ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, சிறுமி குட்டையில் தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்பகிறது. இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Similar News