கோவை: லஞ்சம் வசூலித்த கூட்டுறவு சங்க மேலாளர் சிக்கினார்!

கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு மானியமாக வழங்கப்பட்ட Rebate தொகையில் முறைகேடாக லஞ்சம் வசூலித்ததாக கைது.;

Update: 2025-04-22 03:28 GMT
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், வதம்பச்சேரி கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் சௌந்தப்பன், கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு மானியமாக வழங்கப்பட்ட Rebate தொகையில் முறைகேடாக லஞ்சம் வசூலித்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று திடீரென கூட்டுறவு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், மேலாளர் சௌந்தப்பனிடமிருந்து பல்வேறு வட்டாரங்களில் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15,89,950 ரூபாய் ரொக்கப்பணம் கையும் களவுமாக கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட சௌந்தப்பனை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கூட்டுறவு சங்க வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News