சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (36) . தொழிலாளியான இவர் நல்ல குடிப்பழக்கம் உடையவர். கடந்த 20 ஆம் தேதி இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். அதனைப் பார்த்த அவரது மனைவி திட்டி உள்ளார் உடனடியாக படுக்கை அறைக்கு சென்றவர் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே பார்க்கும் பொழுது சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்து உள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து உடலை குமரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.