நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் ராஜ் (65) இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுப்பணி துறையில் கண்காணிப்பு பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஸ்டெல்லா. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிள்ளைகளை பார்க்க அடிக்கடி சென்னை சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்து வீட்டில் உள்ள சொத்து ஆவணங்களும் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஏ. எஸ். பி., லலித்குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் உமா மற்றும் போலீசார் பார்வதிபுரம் வீட்டில் சென்று, மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் உடன் சென்று விசாரணை நடத்தினர். நிர்மல் ராஜிம் அவரது மனைவி ஸ்டெல்லாவும் கடந்த டிசம்பர் மாதம் சென்னைக்கு சென்றுள்ளனர் இதற்கு இடையில் நடந்த பிப்ரவரி மாதம் நிர்மல்ராஜ் மட்டும் கார் இன்சூரன்ஸ் பணம் கட்டுவதற்காக வந்து சென்றுள்ளார். அதற்குப் பிறகுதான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் முன்பு இரவு ஒரு மணி அளவில் அவர் வசிக்கும் தெருவில் நாய்கள் கத்தும் சத்தம் அதிகம் கேட்டுள்ளது இதன் அடிப்படையில் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.