வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது முன்னாள் எம்.எல்.ஏ கல்லூரி பேருந்து மோதி குழந்தை பலி
வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தீபிகா என்ற குழந்தை மீது முன்னாள் எம்.எல்.ஏ கல்லூரி பேருந்து மோதி குழந்தை பலி பேருந்து ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை.;
திருவள்ளூர் மாவட்டம் மேலப்பூடி கிராமத்தில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தீபிகா என்ற குழந்தை மீது முன்னாள் எம்.எல்.ஏ கல்லூரி பேருந்து மோதி குழந்தை பலி பேருந்து ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் மேலப்பூடி கிராமத்தில் வசித்து வருபவர் மோகன் இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கம்பவுண்டர் ஆக வேலை செய்து வருகிறார் இவரது மனைவி பெயர்- சாந்தி, இவர்களுக்கு முதல் குழந்தை அரி வயது (7), இரண்டாவது குழந்தை தீபிகா வயது (1.1/2), மேற்படி குழந்தை தீபிகா மேற்படி குழந்தை தீபிகா வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பொதட்டூர்பேட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ - இ.எஸ். எஸ். ராமன் என்பவருடைய கலைக் கல்லூரி இருந்து மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஓட்டுநர் ரவி என்பவர் அதிவேகமாக பேருந்தை ஓட்டி வந்தவர் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த பகுதியில் குழந்தை மீது மோதி குழந்தை தீபிகா சம்பவ இடத்தில் பலி விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து ஓட்டுனர் ரவியை பொதுமக்கள் தர்ம அடி அடித்து பொதட்டூர்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர் பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது கல்லூரி பேருந்து மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.....