ஜே.இ.இ. தேர்வில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு
பெற்றோர் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு;
ஜே.இ.இ. 2 கட்ட ேதர்வுகளிலும் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் எம்.ஹாரீஸ், அர்மான் தாரிக், கவிசன் ஆகியோர் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவர்களை செந்தில் குழும தலைவர் சி.கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, பள்ளி செயலாளர் தனசேகர், பள்ளி தாளாளர் தீப்தி, முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரேசன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், நிர்வாக அலுவலர் பிரவீன்குமார், துணை முதல்வர் நளினி உள்பட பலர் பாராட்டினர். மேலும் செந்தில் பப்ளிக் பள்ளியில் ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பித்த 61 மாணவர்களில் 33 பேர், 90 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.