கோவை: கணவரை காணவில்லை - ஆட்சியரிடம் மனு - கதறும் மனைவி !

கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த தகவலும் இல்லை என மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார்.;

Update: 2025-04-22 07:09 GMT
கோவை, துடியலூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர். சிறுநீரகப் பிரச்சனைக்காக டயாலிசிஸ் சிகிச்சையும் பெற்று வந்த அவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு நில விற்பனை சம்பந்தமாக உறவினர் ஒருவரைப் பார்க்கச் சென்றபோது திடீரென காணாமல் போனார். அவரது மனைவி காமாட்சி, இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், நான்கு மாதங்கள் கடந்தும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்ணீருடன் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மூன்று பெண் குழந்தைகளுடன் தவித்து வரும் காமாட்சி, தனது குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்பச் செலவு மற்றும் வீட்டுக் கடன் என பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகக் கூறினார். மேலும், அவரது கணவரின் மொபைல் போன் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நிலையிலும், பாலாஜி எங்கே இருக்கிறார் என்பது தெரியாதது அவரை மேலும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

Similar News