தென்காசியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தகவல்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தகவல்;

Update: 2025-04-22 07:50 GMT
தென்காசி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (25.04.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் குறிப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிகளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இக்குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு தென்காசி மாவட்ட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News