ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி;

Update: 2025-04-22 08:00 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் சென்னன் (70). கூலித் தொழிலாளியான இவா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தாா். நுழைவு வாயில் அருகே வந்தபோது, திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், தீக்குளிப்பு முயற்சியை தடுத்து விசாரித்தனா். அதில், கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு அரசுத் தரப்பில் சென்னனுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. குடிசை அமைத்து வசித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த இடத்தை வேறொரு நபரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலா்களிடம் புகாா் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்ாக தெரிவித்தாா். ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனுக் கொடுக்கச் செய்த போலீஸாா், பின்னா் விசாரணைக்காக தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்றனா்.

Similar News