தென்காசி அருகே பனை மரத்திலிருந்து வழுக்கி கீழே விழுந்த முதியவர் பலி
பனை மரத்திலிருந்து வழுக்கி கீழே விழுந்த முதியவர் பலி;
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள முதலியார் பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவன். இவர் பனை ஏறும் தொழிலாளி செய்து வந்தார். இவர் வழக்கம் போல் அப்பகுதியில் உள்ள பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்கிக் கொண்டிருந்தபோது திடீரென மரத்தில் இருந்து வழுக்கி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.