கட்டுரை, பேச்சு போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
கட்டுரை, பேச்சு போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்;
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகின்ற 09.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை. பேச்சுப் போட்டிகள் வருகின்ற 10.05.2025 (சனிக்கிழமை) அன்றும் சிவகங்கை, மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில், கலந்துகொள்ளும் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களைத் தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியின் வாயிலாக பதிவிறக்கம் செய்தோ அல்லது சிவகங்கை, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவோ பெற்று, பள்ளி மாணாக்கர்கள் தலைமையாசிரியரின் பரிந்துரைக்கடிதத்துடனும், கல்லூரி மாணாக்கர்கள் முதல்வர் / துறைத்தலைவரின் பரிந்துரைக்கடிதத்துடனும் வருகின்ற 30.04.2025ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பித்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்