திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சி ஐ டி யு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஊராட்சிகளில் பணிபுரியும் OHT ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சி ஐ டி யு சார்பில் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-22 13:22 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சிஐடியு மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஊராட்சிகளில் பணிபுரியும் OHT ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் 100க்கும் மேற்பட்டோர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 2017 ஆம் ஆண்டு அரசாணையின் படி குறைந்தபட்ச ஊதியம் OHT ஆப்ரேட்டர்களுக்கு மாதம் ரூ 14,593 /- தூய்மை பணியாளர், தூய்மை காவலர்களுக்குரூ 12,593/- ஊதியம் வழங்குகவும், OHT ஆப்ரேட்டர்களுக்கு பணிக்கொடை ஓய்வுதியம் வழங்கவும், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சியின் மூலம் நேரடியாக ஊதியம் வழங்கவும், தூய்மை காவலர்களை நலவாரியத்தில் பதிவு செய்து அட்டை வழங்கவும், 7 வது ஊதியக்குழு சம்பளம் நிலுவைத் தொகை உடனடியாக வழங்கவும், OHT ஆப்ரேட்டர்களுக்கு, தொட்டி சுத்தம் செய்ய கிளினிங் அலவன்ஸ் ரூ 300 யை உயர்நிதிமன்ற உத்தரவின்படி வழங்கவும், பணி ஓய்வு, இறப்பின் காரணமாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பு வேண்டும்" என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News