பெரியகுளம் காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஏப்.21) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது புதிய பேருந்து நிலையம் அருகே சூர்யா (27) என்பவர் பொது இடத்தில் நின்று கொண்டு ஆபாசமாக பேசி, போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். போலீசார் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் சூர்யா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.