போடி அருகே சிலமலை பகுதியை சேர்ந்தவர் காளிகுமார் (34). இவர் நேற்று (ஏப்.21) அவரது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து காளிகுமார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த காளிகுமாரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் பேருந்து ஓட்டுனர் மூவேந்திரன் மீது வழக்குப்பதிவு.