தென்காசி கல்குவாரி குளத்தில் ஆண் சடலம் மீட்பு
கல்குவாரி குளத்தில் ஆண் சடலம் மீட்பு;
தென்காசி மாவட்டம் கீழவாலிபன்பொத்தை தென்காசி அருகில் உள்ள பகுதியிலுள்ள செயல்படாத கல்குவாரி குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அந்த நபா் கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டி சமுதாய நலக்கூடத் தெருவைச் சோ்ந்த முருகையா (46) என, விசாரணையில் தெரியவந்தது. தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.