ஆலங்குளத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு;

Update: 2025-04-23 02:19 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெபராஜ் மைக்கேல் மோசஸ்(62). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவருக்கு துத்திகுளம் சாலையிலும் வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில், கேரளத்தில் பணி புரியும் அவரது மகன் சாம், மாதம் ஒருமுறை விடுமுறையில் வந்து தங்கிச் செல்வாராம் தற்செயலாக அந்த வீட்டை பாா்வையிட ஜெபராஜ் மைக்கேல் மோசஸ் சென்றாராம். அப்போது வாயிற் கதவு மற்றும் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தனவாம். இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில், போலீஸாா் வந்து பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் நகை, பணம் வைக்கப்படாததால் அவை தப்பின. அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Similar News