கோவை: ஆன்லைன் ஐ.பி.எல் சூதாட்டம் - இருவர் கைது !
கோவை செல்வபுரம் பகுதியில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீதர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.;
கோவை செல்வபுரம் பகுதியில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீதர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆன்லைன் செயலிகள் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள், ஒவ்வொரு பந்திற்கும் பணம் கட்டி விளையாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாநிலம் முழுவதும் ஐ.பி.எல் சூதாட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், கோவை மாநகர காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஏழு பேர் கைது செய்யப்பட்டு பணம், கார் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.