காஷ்மீர் சம்பவத்தை தொடர்ந்து நெல்லையில் உச்சபட்ச பாதுகாப்பு
நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமணி;
காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமணி இன்று தெரிவித்துள்ளார். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் வாகன சோதனையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.