கோவை: அதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து போஸ்டர்கள் !

கோவையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-04-23 04:47 GMT
அதிமுகவும் பாஜகவும் இணைந்து 2026-ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கும் என்று அதிமுக எடப்பாடி பழனிசாமியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து அறிவித்திருக்கும் நிலையில், கோவையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.எம்ஜிஆர், அம்மா ஆட்சி அமைப்போம், துரோகிகளின் சந்தர்ப்பவாத கூட்டணியை தவிர்ப்போம், கொடி எடுக்கும் தொண்டர்கள் ஒன்று கூடுவோம் முடிவெடுப்போம் என்ற வாசகங்களுடன், ஒருங்கிணைப்பாளர் புகழேந்தியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள், பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பு குழுவினர், பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர்கள், அதிமுகவின் உட்கட்சி பூசலை வெளிப்படுத்துவதாகவும், பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுகவில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதையும் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Similar News