கேஸ் கசிந்ததில் தீ. ஒருவர் பலி.
மதுரை அருகே கேஸ் கசிந்ததில் தீ பிடித்து ஒருவர் பலியானார்.;
மதுரை அருகே வலையன்குளம் சோளங்குரு ணியை சேர்ந்த கந்தன் (65) என்பவர் விமான நிலையம் அருகே உள்ளதனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19மதேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றவர் மதியம் போடுவதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்தார்.அதன் பிறகு சிலிண்டரை நிறுத்த மறந்து விட்டார் . சிறிது நேரம் சென்று மீண்டும் அவர் அடுப்பை பற்ற வைக்க முயன்ற போது கசிந்திருந்த கேசில் தீப்பற்றியது.இதில் அவர் தீயில் கருகினார்.அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ( ஏப் 22) உயிரிழந்தார். இது குறித்து பெருங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்