தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எம்.பி கண்டனம்
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து மதுரை எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.;
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த மதுரை எம்.பி தனது கருத்தை சமூக வலைதளத்தில் கீழ்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார். அதில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும் , பாதிக்கப்பட்டோருக்கு உயர் சிகிச்சையும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தாக்குதலில் பலியானவர்களினுடைய குடும்பங்களின் துயரத்திற்கு ஆறுதல் கூற வார்த்தையற்று தவிக்கிறது தேசம் என்ற கருத்தை சமூக வலைதளத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் பதிவு செய்துள்ளார்.