திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து தற்பொழுது கோடை விடுமுறை மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆறுகளில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்து ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.