கோவை: ஜி.ஆர்.டி அருங்காட்சியகம் நாளை திறப்பு !

பி.எஸ்.ஜி ஜி.ஆர்.டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் திறப்பு விழா நிகழ்ச்சி கோவை நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி ஐடெக் கல்லூரி வளாகத்தில் நாளை நடைபெறுகிறது.;

Update: 2025-04-23 07:28 GMT
பி.எஸ்.ஜி ஜி.ஆர்.டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் திறப்பு விழா நிகழ்ச்சி கோவை நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி ஐடெக் கல்லூரி வளாகத்தில் நாளை நடைபெறுகிறது. இது குறித்து பி.எஸ்.ஜி கேர் இயக்குனர் டாக்டர் ஆர்.ருத்ரமூர்த்தி, பி. எஸ்.ஜி ஐடெக் முதல்வர் டாக்டர் சரவணகுமார், மியூசியம் இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம் மோகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை நீலாம்பூரில் உள்ள ஐடெக் கல்லூரியில் முப்பதாயிரம் சதுர அடியில் மூன்று தளங்களில் ஜி.ஆர்.டி அறிவியல் அருங்காட்சியகத்தை நிறுவுவப்படுகிறது. டாக்டர் ஜி. ஆர். தாமோதரனின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த அதிநவீன வசதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கண்டுபிடிப்பு, உத்வேகம் மற்றும் கற்றல் மையமாக நிற்கிறது. இந்த உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கு நிலம் மற்றும் உள்கட்டமைப்பை பி. எஸ்.ஜி அண்ட் சன்ஸ் வழங்கி உள்ளது. மாணவர்கள் அதிநவீன அறிவியல் கற்றல் அனுபவங்களை அணுகுவதை உறுதி செய்கிறது என்று கூறியுள்ளனர்.

Similar News