சிந்தாமணி பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாத ஓட்டுனர்களுக்கு அபராதம்
பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாத ஓட்டுனர்களுக்கு அபராதம்;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடிக்கு வருகை தந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி சிந்தாமணி நகர நல கமிட்டி செயலாளர் ராஜவேல் பாண்டியன் உட்பட பல்வேறு அமைப்பினர் சிந்தாமணி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்லும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர், அதனைத் தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் சிந்தாமணி பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் உள்ளே சென்று வருகிறது உள்ளே செல்லாத பேருந்து ஓட்டுநர்களுக்கு கண்காணிப்பாளர் முருகன் அபராதம் மற்றும் மெமோ வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.