தேவகோட்டையில் கஞ்சா விற்பனை - மூவர் கைது
தேவகோட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை கைது செய்து 1.6 கிலோ கஞ்சா பறிமுதல்;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் கண்டதேவி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திருப்புவனத்தைச் சேர்ந்த குருமணி மகன் சிலம்பரசன், முருகானந்தம் மகன் தமிழரசன், முருகேசன் மகன் அஜய் ஆகிய மூவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்