வரி செலுத்தினால் ஊக்கத்தொகை வெள்ளகோவில் நகராட்சி அறிவிப்பு

வரி செலுத்தினால் ஊக்கத்தொகை வெள்ளகோவில் நகராட்சி அணையாளர் அறிவிப்பு;

Update: 2025-04-23 15:17 GMT
வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:- வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி வசூல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 2025- 26 -ம் ஆண்டுக்கான முதல் மற்றும் 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் விதிமுறைப்படி 5 சதவீத ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்பு பெற்றுள்ளது. பல தொழிலதிபர்கள் விரும்பி ஒரே தவணையில் வரிகளை செலுத்தி வருகின்றனர். நகராட்சி வசூல் மையம், வருவாய் ஆய்வாளர்கள், உதவியாளர்களால் நேரடியாகவும் வரி வசூல் செய்யப்படுகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முன்கூட்டியே வரியினங்களை செலுத்தி உதவ வேண்டும். நகராட்சி ஆணையர் நேரில் சென்று தெரிவித்ததின் பேரில் தொழிலதிபர் ஜி. குணசேகரன் என்பவர் தன்னுடைய ஒரு வருடத்துக்கான மொத்த சொத்து வரி ரூ.14 லட்சத்தை ஒரே தவணையில் செலுத்தினார். பொதுமக்கள் இந்த சலுகை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News