பேய் பங்களாவாக மாறி உள்ள மக்கள் வரிப்பணம் வீண் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடியிருப்பு இரண்டு வருடமாக பயன்படுத்தாத வருவாய்த்துறை கோட்டாட்சியர் பேய் பங்களாவாக மாறி உள்ள மக்கள் வரிப்பணம் வீண் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு;

Update: 2025-04-23 15:52 GMT
திருத்தணி வருவாய் துறை கோட்டாட்சியருக்கு 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடியிருப்பு இரண்டு வருடமாக பயன்படுத்தாத வருவாய்த்துறை கோட்டாட்சியர் தீபா பேய் பங்களாவாக மாறி உள்ளது, மக்கள் வரிப்பணம் வீண் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா, பள்ளிப்பட்டு தாலுகா, ஆர்.கே.பேட்டை தாலுகா என மாவட்டத்தின் மூன்று தாலுகா உள்ளது இங்கு மட்டும்தான் இந்த திருத்தணி தொகுதி ஆகும் இப்படி மூன்று தாலுகாவிற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திருத்தணி காசிநாதபுரம் ஏரியில் 20 வருடங்களுக்கு முன்பு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது, திருத்தணி மக்களுக்கு அனைத்து விதமான வருவாய்த்துறை விஷயங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் இந்த அலுவலகத்திற்கு வருகின்றனர் காவல்துறை அதிகாரிகளும் இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றனர், தேர்தல் நேரத்திலும் தேர்தல் அலுவலகமாக இந்த அலுவலகம் பயன்படுகிறது, இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தற்போது வருவாய் கோட்டாட்சியராக இரண்டு வருடமாக தீபா என்பவர் பணிபுரிந்து வருகிறார் இவரது அலுவலகம் அருகில் வருவாய் துறை கோட்டாட்சியர் குடியிருப்பு உள்ளது, ரூபாய் 40 லட்சம் ரூபாய் செலவீட்டில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு தனி பங்களாவாக உள்ளது, இதில் ஏசி வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, என அனைத்து வசதிகளும் உள்ளது, ஆனால் இந்த பங்களாவை கடந்த இரண்டு வருடமாக வருவாய் கோட்டாட்சியர் தீபா பயன்படுத்தாமல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆறாயிரம் ரூபாய் மாத வாடகையில் குடியிருந்து வருகிறார் மேலும் அரசு சார்பில் 40 லட்ச ரூபாய் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு வீணாகி, பாழாகி, முள் செடிகள் கொடிகள் வளர்ந்து சுற்று சுவர்கள் இடிந்து பேய் பங்களாவாக மாறி உள்ளது மக்கள் வரி பணம் வீணடிக்கும் பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர் மேலும் மக்கள் வரிப்பணம் வீணாகாமல் இருக்க பேய் பங்களாவாக மாறி உள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பில் ஆர்.டி. ஓ தீபா பயன்படுத்த உடனடி நடவடிக்கையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்தணி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News