மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் அமைச்சரிடம் கோரிக்கை மனு

மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் அமைச்சரிடம் கோரிக்கை மனு;

Update: 2025-04-24 00:41 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளர் மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு-வை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் . இந்த மனுவை ஏற்றுக் கொண்டு கோரிக்கைகள் அனைத்து விரைவில் நிறைவேற்றி உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன் எடுத்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News