சங்கரன்கோவிலில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை
ரெயில்வே மேம்பாலம் அமைக்க அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை;
தென்காசி பாராளு மன்ற உறுப்பினர் டாக்டர் ராணி பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு விடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தென்காசி பாராளு மன்ற தொகுதி சங்கரன் கோவில் ராஜ பாளையம் சாலை என். ஜி,ஒ காலனியில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. சங்கரன்கோவில் நகர் பகுதியில் முக்கிய வழிபாட்டு தலமான சங்கரநாராயணசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர், மேலும் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை ஆகிய வற்றுக்கு பொதுமக்கள் வருகை தருகிறார்கள். என் ஜி.ஓ.காலனி ரெயில்வே கேட் அருகே நான்கு அரசு உதவி பெறும் பள்ளிகள் டி.எஸ்.பி. அலுவலகம் நகர் போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம் அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து அறிவு காயல் பிரிவு காவல் நிலையம், துறை அலுவலகம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கும், நகரத்தில் பிரச்சினைகள் சரி செய்யவோ ரெயில்வே கேட் மூடப்படும் போது சுமார் 20 நிமிடம் வரை காலதாமதம் ஏற்படும் போது பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்கின்றன. தற்போது ரெயில் போக்குவரத்தும் அதிகரித்து உள்ளது. இதனால் அடிக்கடி ரெயில்வே கேட் பூட்டப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சாலையின் போக்குவரத்து .நெரிசலை குறைக்கும் பொருட்டு ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு , நடவடிக்கை , வேண்டும். எடுக்க இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.