கோவை:தமிழ்நாடு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

மத்திய, மாநில அரசுகள் மூடிய பஞ்சாலைகள், ஸ்டெர்லைட், ஹெச்பி போன்ற தொழிற் சாலைகளை திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-24 02:55 GMT
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மூடப்பட்ட பஞ்சாலைகள், ஸ்டெர்லைட் மற்றும் ஹெச்பி உள்ளிட்ட தொழிற்சாலைகளை திறக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், மூடப்பட்ட தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பதாகவும், தாமிர பற்றாக்குறையால் கிரைண்டர், மோட்டார், கம்பரசர் மற்றும் பம்ப் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Similar News