கோவை: பஹல்காம் தாக்குதல் - விஹிப மோட்ச தீப வழிபாடு !
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.;
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலால் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிகக் கொடிய தாக்குதல் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில் கோவை மாநகர் மாவட்டம் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ரத்தினபுரி பகுதியில் உள்ள ரத்தின விநாயகர் கோவிலில் காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ஹிந்துக்களின் ஆன்மா சாந்தியடைய நேற்று மோட்ச தீபம் ஏற்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வழிபாடு நடத்தினர். இதில் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.