கோவை: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் - பாஜக சார்பில் அஞ்சலி !

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக சார்பில் கோவை சித்தாப்புதூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2025-04-24 03:40 GMT
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக சார்பில் கோவை சித்தாப்புதூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி. முருகானந்தம், காஷ்மீரில் நடந்த தாக்குதல் துயரமானது. பிரதமர் மோடியின் ஆட்சியில் தீவிரவாதம் இல்லாத சூழல் உருவாகி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகையை பொறுக்க முடியாத பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் நூறு தலைகள் உருள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அபிநந்தனை மீட்டது போல் அரசு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்" என்றார். மேலும், தமிழகத்தில் திருப்பூர், கோவை பகுதிகளில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளனர். தமிழக அரசு விழித்து, காவல்துறை மெத்தனத்தை கைவிட்டு, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் என எச்சரித்தார்.

Similar News