மேலப்பாளையத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை;
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கல்வத் நாயகம் தெருவில் குடிநீருடன் கழிவு நீர் கலப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் இன்று நடவடிக்கை மேற்கொண்டு குடிநீருடன் கழிவு நீர் கலப்பது சீரமைக்கப்பட்டது. துரித நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.