சிறுகள்ளூர் சிவாலயத்தில் அப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை

நல்லம்பள்ளி அருகே அமைந்துள்ள சிறுகளூர் சிவாலயத்தில் அப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை;

Update: 2025-04-24 05:56 GMT
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட சிறுகளூர் கிராமத்தில் அமைந்திருக்கும் சிவாலயத்தில் அப்பர் சுவாமிகளின் சதய விழா மற்றும் சிவகாமி அம்மை, நடராசர் பெருமாள் ஆகியோரின் தெய்வத்தமிழ் திருக்குடமுழுக்கு பெருவிழா இன்று (ஏப்ரல்-24) வெகு விமரிசியாக நடைபெற்றது. மங்கல இசை ஸ்ரீ விநாயகர் வழிபாடு தேவதா அனுக்ஞை.எஜமானர் சங்கல்பம். புன்னியாக வாசனம். கணபதி ஹொமம். நவகிரக ஹொமம். பூர்ணாகுதி. தீபாராதணை நடைபெற்றது அதைத்தொடர்ந்து அதைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு பூஜை செய்து கொடி ஏற்றப்பட்டது அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிவனடியார்களால் யாகம் வளர்க்கப்பட்டு சுவாமிகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Similar News