கோடைகாலம் வந்துடுச்சு என கவனமாக இருக்க வேண்டும் என வில்லுப்பாட்டு விழிப்புணர்வு

கோடைகாலம் வந்துடுச்சு என கவனமாக இருக்க வேண்டும் என வில்லுப்பாட்டு விழிப்புணர்வு;

Update: 2025-04-24 11:33 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் வில்லிசை கச்சேரி என்ற குழுவினர் அவ்வப்போது சமூகநலம் சார்ந்த பாடல்களை வில்லுப்பாட்டு மூலம் பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வழக்கம். அந்த வகையில் இதற்கு முன்பாக கொரோனா காலங்களில் பாதுகாப்பாக இருப்பது, மின்சாரத்தை எவ்வாறு கையாள்வது, புயல், வெள்ளம் உள்ளிட்ட மழைக்காலங்களில் எவ்வாறு செயல்படுவது என பல பாடல்களை வில்லிசை மூலம் பாடி புகழ் பெற்றவர்கள். தற்போது கோடை காலம் வந்து விட்டதால் கோடைகாலத்தில் மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டுமென வில்லிசை மூலம் பாடல் பாடியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பாடலில் கோடைகாலம் வந்துடுச்சு என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடல் பொதுமக்கள் கோடைகால வெயிலை எவ்வாறு சமாளிப்பது மற்றும் இயற்கையான இளநீர்,மோர், நீர் அதிகமாக பருக வேண்டுமென பாடல்களின் வரிகள் இடம் பெற்றுள்ளது.

Similar News