செந்துறை தனியார் திருமண மண்டபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம்
செந்துறை தனியார் திருமண மண்டபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
ஜெயங்கொண்டம் ஏப்.25- மாநில சட்டப் பணிகள் ஆனண குழுவின் வழிகாட்டுதல் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மலர் வாலண்டினா உத்தரவு படியும் செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி வழிகாட்டுதல் படியும் , இன்று செந்துறை தனியார் திருமண மண்டபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் அணை குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட தலைமை நீதிபதி மலர் வாலன்டினா தலைமை உரையாற்றினார். தனது உரையில் யாருக்காக சட்டம் இயற்றப்பட்டதோ அது அவர்களை சென்றடைய வேண்டும் என்று கூறினார். பெற்றோர்கள் குழந்தைகளை தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்றும் குழந்தைகள் எதையும் தாங்குபவர்களாக இருக்க வேண்டும் என்றும் சமுதாயத்தை பாதுகாக்க பெண் குழந்தைகளுக்கு. கட்டாயம் கல்வி அறிவு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.கைப்பேசியின் பயன்பாட்டை பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தான் கற்றுத் தர வேண்டும் என்றும் கூறினார். தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் மணிமேகலை, செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆக்னஸ் ஜெபா கிருபா முன்னிலை வகித்து வட்ட பணிகள் குழுவின் செயல்பாட்டை பற்றியும் , போக்சோ சட்டத்தைப் பற்றியும் , பெண் குழந்தைகளின் திருமண வயதை பற்றியும், பாலியல் சமத்துவத்தை பற்றியும் சட்ட விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.முகாமில் முதலில் மூத்த வழக்கறிஞர் சின்னதுரை வரவேற்றார். ரவிச்சந்திரன் திட்ட இயக்குனர் சட்ட கருத்துக்களை வழங்கினார்.வழக்கறிஞர் சங்கத் தலைவர் காரல்மாக்ஸ், முன்னாள் செயலாளர் .பாலு , சசிகுமார் .பெண் வழக்கறிஞர் காயத்ரி ஆகியோர் சட்ட கருத்துகளை மக்களுக்கு வழங்கினர். வழக்கறிஞர் கல்பனா, உமாபதி நிகழ்வின் கருத்துக்களை தொகுத்து வழங்கினார்கள். இம்முகாமில் அனைத்து வழக்கறிஞர்களும், கவிதா உதவி திட்ட மேலாளர், திருவரங்கன் மேலாளர் , வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.மகளிர் சுய உதவி குழு பெண்களும், பொது மக்களும், நீதிமன்ற ஊழியர்களும், சட்ட தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.இறுதியில் வட்ட சட்ட ப்பணிகள் குழுவின் முது நிலை நிர்வாக உதவியாளர் புனிதா நன்றி கூறினார்.