காஷ்மீர் தாக்குதல்: ராணுவ வீரர்கள் குறித்து அவதூறு கருத்து - கம்யூனிஸ்ட் சுந்தரவல்லி மீது பாஜக புகார்

காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுந்தரவல்லி என்பவர் தனது எக்ஸ் வலைதளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக புகார்.;

Update: 2025-04-25 02:56 GMT
காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுந்தரவல்லி என்பவர் தனது எக்ஸ் (X) வலைதளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இது, இந்திய ராணுவத்தின் மாண்பை குறைக்கும் வகையிலும், பாஜக மற்றும் இந்து சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும் இருப்பதாக பாஜக மகளிர் அணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக, பாஜக கோவை மாவட்ட மகளிர் அணியின் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், சுந்தரவல்லி பதிவிட்ட கருத்துக்கள் ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகவும், சமூகத்தில் அமைதியின்மையை தூண்டும் வகையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுந்தரவல்லி தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக மகளிர் அணியினர் வலியுறுத்தினர். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் ஆணையாளரிடம் கோரிக்கை வைத்தனர்.

Similar News