மின் கோபுரத்தில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து பலி

மின் கோபுரத்தில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து பலி வெள்ளகோயில் காவல்துறை விசாரணை;

Update: 2025-04-25 04:04 GMT
வெள்ளகோவில் நாகமநாயக்கன்பட்டி பச்சாகவுண்டன் வலசை சேர்ந்தவர் நல்லசிவம். இவரது மனைவி சித்ரா தேவி. இவர்களுடைய மகன் சிவசெல்வன் (வயது 27). இவர் கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது மன விரக்தி அடைந்து மனநிலை சரியில்லாமல் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சிவசெல்வன் அங்குள்ள உயர் அழுத்த மின்கோபுரத்தில் ஏறினார். பின்னர் மின்கம்பியை பிடித்தார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News