சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் மச்சப்பாண்டி (23). இவர் 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். அதனை சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக மச்சப்பாண்டி சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதுகுறித்த புகாரில் போடி மகளிர் போலீசார் மச்சப்பாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று (ஏப்.24) அவரை கைது செய்தனர்.