திருவேங்கடம் மிட்டாய் கடையில் செல்போன் திருடியவர் கைது

மிட்டாய் கடையில் செல்போன் திருடியவர் கைது;

Update: 2025-04-25 05:56 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியே சேர்ந்த சாமுவேல் இவர் அப்பகுதியில் மிட்டாய் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் செல்போனுக்கு கடையில் சார்ஜ் போட்டுவிட்டு அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து பார்த்தபோது செல்போனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர்கள் செல்போனை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த வாலிபர்களின் கேமராவில் பதிவான அடையாளம் மூலம் விசாரித்தபோது அவர்கள் திருவேங்கடம் பகுதியில் உள்ள அக்ராஹரத்தை திருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் முருகன் (வயது 35), என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்த போலீசார் அவர்கள் திருடி சென்ற ரூ.15ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News