கோவை: பூத் கமிட்டி மாநாடு ஏற்பாடுகள் தீவிரம் - புஸ்லி ஆனந்த் !

சூலூர் அருகே நெசவாளர் காலனியில், தமிழக வெற்றி கழகம் சார்பில் விலையில்லா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கோவில் பொருள் வைப்பு அறையை புஸ்லி ஆனந்த் திறந்து வைத்தார்.;

Update: 2025-04-25 09:46 GMT
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், கோவையில் நாளை நடைபெற உள்ள பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளார். மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் தெரிவித்துள்ளார். சூலூர் அருகே நெசவாளர் காலனியில், தமிழக வெற்றி கழகம் சார்பில் விலையில்லா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கோவில் பொருள் வைப்பு அறையை புஸ்லி ஆனந்த் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் வருகை மற்றும் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். முன்னதாக, புஸ்லி ஆனந்த் வருகையின்போது, JCB இயந்திரம் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், அந்த வரவேற்பை அவர் பெருந்தன்மையுடன் தவிர்த்தார். பின்னர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வைப்பு அறையை திறந்து வைத்தார். வழியெங்கும் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை நடைபெற உள்ள பூத் கமிட்டி மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News